30வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் விஜய் தேவரகொண்டா

30வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் விஜய் தேவரகொண்டா

30வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் விஜய் தேவரகொண்டா

எழுத்தாளர் Fazlullah Mubarak

09 May, 2020 | 12:59 pm

COLOMBO (NEWS1ST)  –  தெலுங்கு சினிமாவில் பெயர் பெற்ற ஒரு இந்திய திரைப்பட நடிகரே விஜய் தேவரகொண்டா. 

இன்று அவருக்கு 30ஆவது பிறந்தநாள். 1989ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி நகர்கர்னூல் மாவட்டத்தில் பிறந்த அவர், ஒரு தசாப்த காலத்துக்கு மேல் திரையுலகில் மின்னும் நட்சத்திரமான பிரகாசித்து வருகின்றார்.

2011 ஆம் ஆண்டில் ரவி பாபுவின் காதல் நகைச்சுவை திரைப்படமான நுவ்விலா (2011இல்) எனும் திரைப்படம் மூலம் அறிமுகமான இவர், யெவடே சுப்பிரமணியம் (2015 இல்) எனும் படத்தில் துணை வேடத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்துக் கொண்டார்.

2016 பிளாக்பஸ்டர் காதல் நகைச்சுவை படமான ”பெல்லி சூப்புலு”வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது மற்றும் சிறந்த படத்திற்கான ஃபிலிம்ஃபெயார் விருது என பல விருதுகளை பெற்றார் .

இதனைத் தொடர்ந்து, விஜய் தேவரகொண்டா, தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அர்ஜுன் ரெட்டி (2017), மகாநடி (தமிழில் நடிகையர் திலகம்) (2018), கீதா கோவிந்தம் (2018) மற்றும் டாக்ஸிவாலா (2018) போன்றவை அதிக வசூல் செய்த அவரின் தெலுங்கு படங்களின் பட்டியல்களாகும்.

அர்ஜுன் ரெட்டியில் அவரது நடிப்புக்கு சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபெயார் விருது  உட்பட பல பாராட்டுகளைப் பெற்றது.

2018 ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் சஞ்சிகை வௌியிட்ட இந்தியாவின் 100 பிரபலங்கள் வரிசையில் 72 ஆவது இடத்தைப் பிடித்து புகழ்பெற்றார் விஜய் தேவரகொண்டா.

இன்று பிறந்தநாளை கொண்டாடும் விஜய் தேவரகொண்டாவுக்கு நியூஸ்ஃபெஸ்டின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்