இன்றும் நாளையும் மெனிங் சந்தை மூடப்பட்டிருக்கும் – திங்கட் கிழமை திறக்கப்படும்

இன்றும் நாளையும் மெனிங் சந்தை மூடப்பட்டிருக்கும் – திங்கட் கிழமை திறக்கப்படும்

இன்றும் நாளையும் மெனிங் சந்தை மூடப்பட்டிருக்கும் – திங்கட் கிழமை திறக்கப்படும்

எழுத்தாளர் Fazlullah Mubarak

09 May, 2020 | 12:31 pm

COLOMBO (NEWS 1ST) – கொழும்பு மெனிங் சந்தை இன்று மூடப்பட்டுள்ளதுடன் நாளையும் இந்த நடவடிக்கை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெசாக் பூரணையை முன்னிட்டு நேற்று மற்றும் நேற்று முன்தினம் மெனிங் சந்தை மூடப்பட்டிருந்தது.

எனினும், நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு இன்றும் நாளையும் சந்தையை மூடுவதற்கு தீர்மானித்ததாக மெனிங் சந்தை பொது வர்த்தகர் சங்கத்தின் பிரதம ஏற்பாட்டாளர் அனில் இந்திரஜித் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணி முதல் மெனிங் சந்தை திறந்திருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணி முதல் பகல் 2 மணி வரை வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் மெனிங் சந்தை பொது வர்த்தகர் சங்கத்தின் பிரதம ஏற்பாட்டாளர் அனில் இந்திரஜித் மேலும் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்