அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை வீதம் அதிகரிப்பு

COVID-19 தொற்றால் அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை வீதம் அதிகரிப்பு

by Bella Dalima 08-05-2020 | 3:48 PM
Colombo (News 1st) அமெரிக்காவில் COVID-19 தொற்று பரவல் காரணமாக வேலைவாய்ப்பின்மை வீதம் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் இம்மாதம் வரை 33 மில்லியன் பேர் வரை வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வாரத்தில் மாத்திரம் 32 இலட்சம் பேர் வேலைவாய்ப்பின்மையை எதிர்நோக்கியுள்ளனர். கொரோனா தொற்று ஏற்படுவதற்கு முன்னர் அமெரிக்காவில் 3.5 வீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை, தற்போது 15 வீதத்தையும் தாண்டியுள்ளதாக அமெரிக்க பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.