COVID-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் இருப்பு 900 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு

by Staff Writer 08-05-2020 | 5:27 PM
Colombo (News 1st) COVID-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் இருப்பு 900 மில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் குறித்த நிதியத்திற்கு நிதியுதவி வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை வெளிநாட்டு சேவைகள் அதிகாரிகள் சங்கம் 2.8 மில்லியன் ரூபாவை COVID-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்களிடம் அண்மையில் கையளித்தது. சப்ரகமுவ மாகாண ஆளுனர் டிக்கிரி கொப்பேகடுவ, மாகாணத்தின் மேலும் பலர் அன்பளிப்பு செய்த நிதிக்கான காசோலைகளை ஜனாதிபதியிடம் கையளித்தார். இலங்கை மத்திய வங்கியின் ஓய்வுபெற்ற அதிகாரிகளின் சங்கம் 05 இலட்சம் ரூபாவையும் இலங்கை டெலிகொம் பௌத்த சங்கம் 03 இலட்சம் ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளன. சட்டப்பூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு வழங்கப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.