வத்தளையில் ஹெரோயினுடன் இருவர் கைது

வத்தளையில் ஹெரோயினுடன் இருவர் கைது

வத்தளையில் ஹெரோயினுடன் இருவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

08 May, 2020 | 2:45 pm

Colombo (News 1st) வத்தளையில் 150 கிராம் 800 மில்லிகிராம் ஹெரோயினை தம்வசம் வைத்திருந்த சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் தம்மிடமிருந்த ஹெரோயினை விற்பனை செய்து பெற்றுக்கொண்டதாக சந்தேகிக்கப்படும் 95,600 ரூபா பணத்தை பறிமுதல் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வத்தளையை சேர்ந்த 23 மற்றும் 32 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்