நாட்டின் பல பகுதிகளில் உரத் தட்டுப்பாடு

நாட்டின் பல பகுதிகளில் உரத் தட்டுப்பாடு

நாட்டின் பல பகுதிகளில் உரத் தட்டுப்பாடு

எழுத்தாளர் Staff Writer

08 May, 2020 | 3:27 pm

நாட்டின் பல பகுதிகளில் உரத் தட்டுப்பாடு

நாட்டின் பல பகுதிகளில் உரத் தட்டுப்பாடு நிலவுவதாக அகில இலங்கை விவசாய சம்மேளனம் தெரிவித்துள்ளது.

நெற் செய்கையாளர்கள், மரக்கறி செய்கையாளர்கள் உள்ளிட்ட விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இதனால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விவசாய அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹப்புஹின்னவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.

உர மூடைகளை கொண்டுசெல்வோர் உள்ளிட்ட உர உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்கள் இந்நாட்களில் தொழிலுக்கு செல்லாமையினால் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதனால் தேசிய ரீதியில் பெற்றுக்கொள்ளக்கூடிய உரத்தை பயன்படுத்தி உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு விவசாய அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹப்புஹின்ன தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்