நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

எழுத்தாளர் Bella Dalima

08 May, 2020 | 2:37 pm

Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு ​வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, நேற்று (07) மாலை கடும் காற்றுடன் பெய்த மழை காரணமாக மாத்தறை, தெனியாய – அக்குரஸ்ஸ பிரதான வீதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.

இதன் காரணமாக தெனியாய – அக்குரஸ்ஸ பிரதான வீதியுடனான ​போக்குவரத்து 2 மணித்தியாலங்கள் தடைப்பட்டிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

முறிந்து வீழ்ந்த மரத்தின் கிளைகள் மின் கம்பிகள் மீது வீழ்ந்ததால் தெனியாயவில் சில இடங்களில் மின் விநியோகம் நேற்று மாலை முதல் தடைப்பட்டிருந்ததுடன், இன்று காலை மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது.

இதேவேளை, வெலிமடையில் நேற்று பெய்த கடும் மழையினால் வர்த்தக நிலையம் ஒன்று உடைந்து வீழ்ந்துள்ளது.

வெலிமடை – பதுளை பிரதான வீதியில் உள்ள சிறிய வர்த்தக நிலையம் ஒன்றே நேற்றிரவு உடைந்து வீழ்ந்துள்ளது.

இதன்போது எவருக்கும் காயமேற்படவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்