கோப்பாயில் திருட்டில் ஈடுபட்ட ஐவர் கைது

கோப்பாயில் திருட்டில் ஈடுபட்ட ஐவர் கைது

கோப்பாயில் திருட்டில் ஈடுபட்ட ஐவர் கைது

எழுத்தாளர் Staff Writer

08 May, 2020 | 3:06 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஊரடங்கு வேளையில் தொடர்ச்சியாக மூன்று வீடுகளில் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கோப்பாய் பொலிஸார் மற்றும் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இனைந்து நேற்று முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் பெண்கள் இருவரும் அடங்குகின்றனர்.

இளவாலை, மல்லாகம் , உடுவில் பகுதிகளைச் சேர்ந்த 20 தொடக்கம் 35 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து வாள், கோடரி, திருடிய நகைகளை அடகு வைத்ததற்கான பற்றுச்சீட்டுக்கள் மற்றும் விற்பனை செய்தமைக்கான பற்றுச்சீட்டுக்கள், 2 சைக்கிள்கள், 4 இலட்சத்திற்கும் அதிகமான பணம் என்பன பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 2.5 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்