Transparency International விடுத்துள்ள எச்சரிக்கை

வெளிநாட்டு பண வைப்புகளுக்கு எந்தவொரு கேள்வியும் கேட்கப்படாத நிலை அபாயகரமானது - Transparency International Sri Lanka

by Staff Writer 07-05-2020 | 8:13 PM
Colombo (News 1st) வெளிநாட்டு பண வைப்புகளுக்கு "எந்தவொரு கேள்வியும் கேட்கப்படாத நிலை” என்ற இலங்கை அரசின் கொள்கையூடாக நிதி தூய்தாக்கலுக்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக Transparency International Sri Lanka அறிவித்துள்ளது. COVID-19 தொற்று காரணமாக , வௌிநாட்டு பணவைப்புகளுக்கான விசேட வட்டி வீதங்களுடன் புதிய கணக்கு முறையை இலங்கை அரசாங்கம் அண்மையில் அறிமுகப்படுத்தியது. எவ்வாறாயினும், COVID-19 தொற்றுக்கு பின்னர் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கு "எந்தவொரு கேள்வியும் கேட்கப்படாத நிலை" என்ற பொருளாதார கொள்கை சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தாது என Transparency International Sri Lanka தெரிவித்துள்ளது. ஆகவே, வெளிநாட்டு பண இருப்புக்களை அதிகரிப்பதற்கான கொள்கைகளின் அவசியத்தை தாம் அங்கீகரிப்பதாகவும், அமுல்படுத்தப்படும் எந்தவொரு புதிய கொள்கையும் இலங்கையில் நடைமுறையிலுள்ள நிதித்தூய்தாக்கலை கட்டுப்படுத்துவதற்கான சட்ட கட்டமைப்பிற்கு உட்பட்டிருக்க வேண்டுமென உறுதியாக நம்புவதாகவும் Transparency International Sri Lanka விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.