ஜனாதிபதி, பிரதமரின் வெசாக் வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதி, பிரதமரின் வெசாக் வாழ்த்துச் செய்தி

எழுத்தாளர் Staff Writer

07 May, 2020 | 3:14 pm

Colombo (News 1st) வெசாக் பண்டிகைக் காலத்தில் பௌத்த சமயம் போதிக்கும் போதனைகளை பின்பற்றி உடல் மற்றும் ஆன்மீக ஆரோக்கியத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

வெசாக் பண்டிகை தொடர்பில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைவாழ் மக்களும் உலகவாழ் மக்களும் எவ்வித நோய்நொடிகளுமின்றி நீண்ட ஆயுளுடன் வாழ பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மானுட சமூகம் பாரிய தொற்றை எதிர்நோக்கியுள்ள இச்சூழ்நிலையில், இம்முறை வெசாக் பண்டிகை கொண்டாடப்படுவதாக ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றை வெற்றிகொள்வதற்கு பௌத்த தர்மங்களையும் வழிநடத்தல்களையும் பின்பற்றுதல் அவசியம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.

இந்த நாளில் தனது உள்ளத்தாலும் உடலாலும் வாக்கினாலும் ஏனையோர் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்