கொரோனா தொற்று: இந்தியாவில் 24 மணித்தியாலங்களில் 89 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்று: இந்தியாவில் 24 மணித்தியாலங்களில் 89 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்று: இந்தியாவில் 24 மணித்தியாலங்களில் 89 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

07 May, 2020 | 3:59 pm

Colombo (News 1st) இந்தியாவில் இன்று காலை நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 89 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, இந்தியாவில் மொத்தமாக பதிவாகிய உயரிழப்புகளின் எண்ணிக்கை 1,783 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 52,952 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 3,561 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலங்களின் அடிப்படையில் மகாராஷ்ட்ராவில் 651 பேரும், குஜராத்தில் 396 பேரும், மத்தியப்பிரதேஷில் 185 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதுடன், 4,829 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று (06) ஒரே நாளில் 771 கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பதிவாகியுள்ளனர்.

சென்னையில் மாத்திரம் நேற்று ஒரே நாளில் 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 771 பேரில் 575 பேர் ஆண்கள் எனவும் 196 பேர் பெண்கள் எனவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 37,53,219 ஆகவும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 2,63,841 ஆகவும் அதிகரித்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்