அரசிற்கு அனுமதிக்கப்பட்ட கடன் எல்லையை விட 120 பில்லியன் ரூபா அதிகம் பெறப்பட்டுள்ளது: Verité Research

அரசிற்கு அனுமதிக்கப்பட்ட கடன் எல்லையை விட 120 பில்லியன் ரூபா அதிகம் பெறப்பட்டுள்ளது: Verité Research

எழுத்தாளர் Staff Writer

07 May, 2020 | 7:48 pm

Colombo (News 1st) 2020 இன் முதலாவது காலாண்டில் அரசாங்கத்திற்கு அனுமதிக்கப்பட்ட கடன் எல்லையை விடவும் 120 பில்லியன் ரூபா அதிகம் பெறப்பட்டுள்ளதாக Verité Research நிறுவனம் வௌிக்கொணர்ந்துள்ளது.

2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட இடைக்கால கணக்கறிக்கையின் பிரகாரம், ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதிக்குள் அரசாங்கம் பெறக்கூடிய அதிகபட்ச கடன் தொகை 721 பில்லியன் ரூபாவாகும்.

எனினும், அரசாங்கம் 841 பில்லியன் ரூபாவை முழுமையான கடன் தொகையாகப் பெற்றுள்ளதாக Verité Research நிறுவனம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்