ஷார்ஜாவில் 48 தளங்களைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் தீ பரவல்

ஷார்ஜாவில் 48 தளங்களைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் தீ பரவல்

ஷார்ஜாவில் 48 தளங்களைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் தீ பரவல்

எழுத்தாளர் Bella Dalima

06 May, 2020 | 5:22 pm

Colombo (News 1st) ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜாவில் 48 தளங்களைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் பரவிய தீ கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

குடியிருப்புகளில் இருந்த பலர் இலேசான காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

ஷார்ஜாவின் அல் நஹ்டா பகுதியில் உள்ள 48 தளங்களைக் கொண்ட அப்கோ அடுக்குமாடியில் திடீரென தீப்பற்றியது.

தீப்பற்றிய வேகத்தில் அடுத்தடுத்த தளங்களுக்கும் தீ வேகமாகப் பரவியது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், போராடி தீயைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதுடன், குடியிருப்புகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டுள்ளனர்.

இதில் 7 பேர் இலேசான காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்