பிரதமர் - இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் சந்திப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ - இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் இடையில் சந்திப்பு 

by Staff Writer 05-05-2020 | 10:01 PM
Colombo (News 1st) அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உத்தேச செயற்றிட்டங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள விடயங்கள் மற்றும் COVID-19 தொற்று ஒழிப்பு செயற்பாடுகள் ஆகியன குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று நடைபெற்றது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Alaina B. Teplitz தலைமையிலான பிரதிநிதிகள் இன்று முற்பகல் பிரதமரை சந்தித்தனர். கொரோனா தொற்று ஒழிப்பு , பொருளாதார சவால்கள் மற்றும் தற்போது ஒத்துழைப்பு வழங்கப்படக்கூடிய விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆடைக் கைத்தொழில் தொடர்பில் அமெரிக்காவின் உதவிகளை பிரதமர் எதிர்பார்த்துள்ளதுடன், நாட்டில் தயாரிக்கப்படும் தனிநபருக்கான பாதுகாப்பு கவசங்களுக்கு சர்வதேச சந்தை வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.