ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 558 பேர் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 558 பேர் கைது

by Staff Writer 05-05-2020 | 3:46 PM
Colombo (News 1st) ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 558 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த காலப்பகுதிக்குள் 139 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதி வரை 46,842 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதுவரை 12,152 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இதனிடையே, நாளை இரவு 8 மணி முதல் 11 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அத்தியாவசிய தேவைகளுக்காக வௌியில் செல்லும் நடைமுறை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.