யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த பெண் தொடர்பில் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தௌிவூட்டல் 

யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த பெண் தொடர்பில் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தௌிவூட்டல் 

எழுத்தாளர் Bella Dalima

05 May, 2020 | 7:21 pm

Colombo (News 1st) யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி இன்று ஊடகவியலாளர் சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தார்.

இதன்போது, நேற்று (04) மாலை யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த பெண் ஒருவர் தொடர்பில் விளக்கமளித்தார்.

குறித்த வயோதிபப் பெண் கொழும்பிலிருந்து அழைத்துவரப்பட்டு,  கொடிகாமம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாகவும் அங்கிருந்து மூன்று தினங்களுக்கு முன்னதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

அவருக்கு ஷயரோகம், உயர் குருதி அழுத்தம், சிறுநீரக செயலிழப்பு போன்ற சுகயீனங்கள் காணப்பட்டதாக மருத்துவர் த.சத்தியமூர்த்தி தௌிவுபடுத்தினார்.

அவருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் குறிப்பிட்டார்.

இதேவேளை, நேற்றைய தினம் வைத்தியசாலையில் 49 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், எவருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதாக த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்