தேர்தல்கள் ஆணைக்குழுவும் ஜனாதிபதியும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்: அசாத்சாலி வலியுறுத்தல்

தேர்தல்கள் ஆணைக்குழுவும் ஜனாதிபதியும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்: அசாத்சாலி வலியுறுத்தல்

தேர்தல்கள் ஆணைக்குழுவும் ஜனாதிபதியும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்: அசாத்சாலி வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

05 May, 2020 | 4:12 pm

Colombo (News 1st) அனைவரினதும் நன்மை கருதி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவும் ஜனாதிபதியும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்சாலி வலியுறுத்தியுள்ளார்.

விடுமுறை தினங்களில் எந்த வகையிலும் ஏற்க முடியாத பல வேட்புமனுக்களை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளமை நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்படலாம் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இழைக்கப்பட்ட பாரதூரமான தவறு என்பதால், அது சரிசெய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி வலியுறுத்தியுள்ளார்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நீதிமன்றம் தலையிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்