கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு  

 கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு  

 கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு  

எழுத்தாளர் Bella Dalima

05 May, 2020 | 3:09 pm

Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு 15- ஐ சேர்ந்த 52 வயதான ​பெண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த பெண் உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 762 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றிலிருந்து இதுவரை 213 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று காலை மேலும் நால்வர் தொற்றுக்குள்ளானமை அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் 33 பேர் தொற்றினால் அடையாளங்காணப்பட்டதுடன், அவர்களில் ​31 பேர் கடற்படை உறுப்பினர்கள் என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

இதேவேளை தொற்றுக்குள்ளானோரில் 540 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்