by Bella Dalima 05-05-2020 | 4:03 PM
Colombo (News 1st) உலக நாடுகளுக்காக தமது எல்லைகளை நீண்ட காலத்திற்கு திறக்கப் போவதில்லையென நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.
காணொளி தொழில்நுட்பத்தினூடாக அவுஸ்திரேலியாவின் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மக்கள் அவுஸ்திரேலியாவிற்கும் நியூஸிலாந்திற்கும் இடையில், தனிமைப்படுத்தல் எதுவுமின்றி சுதந்திரமாகச் செல்வதற்கான சாத்தியங்கள் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
எனினும், மற்றைய நாடுகளிலிருந்து வருவோரைத் தமது நாட்டிற்குள் விரைவில் அனுமதிப்பதற்கான சாத்தியமில்லையென நியூஸிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
COVID-19-ஐ கட்டுப்படுத்தும் நோக்குடன் வௌிநாட்டவர்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில், அவுஸ்திரேலியாவும் நியூஸிலாந்தும் தமது எல்லைகளை மூடியுள்ளன.