வழமைக்கு திரும்பவுள்ள ஈரான்

வழமைக்கு திரும்பவுள்ள ஈரான் - கட்டம் கட்டமாக இயல்பு நிலைக்கு

by Staff Writer 04-05-2020 | 1:58 PM
Colombo (News1st) - மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடான ஈரானில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறைவாகவுள்ள பகுதிகளில் பாடசாலைகள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் என்பன மீளத்திறக்கப்படவுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை ஈரானிய அரசாங்கம் தளர்த்த ஆரம்பித்துள்ள நிலையிலேயே பாடசாலைகள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் மீளத்திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டு, வழிபாடுகளுக்காக ஒன்று கூடுவதற்கு மார்ச் மாதம் நடுப்பகுதியிலிருந்து தடை விதிக்கப்பட்டிருந்தது. ஈரானில் இதுவரை 96,448 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 6,156 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.