கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 3.5 மில்லியனைக் கடந்தது

உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 3.5 மில்லியனைக் கடந்தது

by Bella Dalima 04-05-2020 | 4:26 PM
Colombo (News 1st) உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.5 மில்லியனைக் கடந்துள்ளது. 250,000 மரணங்கள் பதிவாகியுள்ளன. தொற்றுக்குள்ளானவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே குணமடைந்துள்ள நிலையில், தற்போது 24 இலட்சம் பேர் சிகிச்சை பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலேயே அதிகளவிலான தொற்றாளர்களும் மரணங்களும் பதிவாகியுள்ளன. 11,57,945 தொற்றாளர்களும் 67,680 மரணங்களும் அங்கு பதிவாகியுள்ளன. அதற்கடுத்து, ஸ்பெய்னில் 2 ,17,466 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், 25,264 மரணங்கள் சம்பவித்துள்ளன. ஐரோப்பாவில் அதிகளவிலான கொரோனா மரணங்களை எதிர்கொண்ட இத்தாலியில் 2,10,717 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 28,884 பேர் உயிரிழந்துள்ளனர். பிரித்தானியாவில்1,87,842 தொற்றாளர்களும் 28,520 மரணங்களும் பதிவாகியுள்ளன. பிரான்ஸில் 1,68,925 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதுடன், 24,900 மரணங்களை அந்த நாடு சந்தித்துள்ளது. ஜெர்மனியில் 1,65,664 பேர் தொற்றுக்குள்ளாகியதுடன், 6 ,866 மரணங்கள் பதிவாகியுள்ளன. ரஷ்யாவில் 134,687 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில், 1,280 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கியில் 126,045 பேர் தொற்றுக்குள்ளான நிலையில், 3,397 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் தொற்றாளர் எண்ணிக்கை 101,147 ஆகவும் உயிரிழப்பு எண்ணிக்கை 7,025 ஆகவும் பதிவாகியுள்ளது.