மரக்கறி விலை வீழ்ச்சி: பெரும் நட்டத்தில் விவசாயிகள்

மரக்கறி விலை வீழ்ச்சி: பெரும் நட்டத்தில் விவசாயிகள்

மரக்கறி விலை வீழ்ச்சி: பெரும் நட்டத்தில் விவசாயிகள்

எழுத்தாளர் Staff Writer

04 May, 2020 | 7:21 pm

Colombo (News 1st) சந்தையில் மரக்கறி வகைகளின் விலைகள் வெகுவாகக் குறைவடைந்துள்ளதால், விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

கொரோனா தொற்றை அடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள சூழல் காரணமாக இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

நாட்டில் அதிகளவில் மரக்கறி உற்பத்தி செய்யப்படுகின்ற மாவட்டங்களில் பண்டாரவளையும் ஒன்றாகும்.

எனினும், பண்டாரவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல இடங்களில் விவசாய செய்கைகள் கைவிடப்பட்ட நிலையில் இன்று காட்சியளிக்கின்றன.

மரக்கறி வகைகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத வீழ்ச்சியால் இந்த நிலைமை ஏற்பட்டதாக விவசாயிகள் கூறுகின்றன.

தக்காளி, கோவா போன்ற மரக்கறி வகைகளை சந்தையில் 10 ரூபாவிற்கேனும் விற்பனை செய்த முடியாத துர்ப்பாக்கிய நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசாயத்தைக் கைவிட வேண்டிய நிலைக்கு பண்டாரவளை விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

உற்பத்திகளை நியாயமான விலையில் விற்பனை செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்