மட்டக்களப்பில் மாடு கடத்தலில் ஈடுபட்ட குழுவினர் பொதுமக்களிடம் பிடிபட்டனர்

மட்டக்களப்பில் மாடு கடத்தலில் ஈடுபட்ட குழுவினர் பொதுமக்களிடம் பிடிபட்டனர்

மட்டக்களப்பில் மாடு கடத்தலில் ஈடுபட்ட குழுவினர் பொதுமக்களிடம் பிடிபட்டனர்

எழுத்தாளர் Staff Writer

04 May, 2020 | 5:16 pm

Colombo (News 1st) மட்டக்களப்பு – வட்டவான் பகுதியில் மாடு கடத்தலில் ஈடுபட்ட குழுவினர் பொதுமக்களினால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வட்டவான் பகுதியில் கால்நடைப் பண்ணையாளரின் 20 மாடுகள் காணமற்போயிருந்தன.

நேற்று குறித்த பண்ணையாளரின் 6 மாடுகளைக் கடத்திச் செல்ல முற்பட்ட குழுவினரை கால்நடை பண்ணையின் உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் மடக்கிப் பிடித்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் நால்வரும் மாடுகளை ஏற்றிச்செல்ல கொண்டுவரப்படிருந்த வாகனமும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த கும்பல் தொடர்ச்சியாக கால்நடைகளை திருடுபவர்கள் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்