33 குற்றங்களுடன் தொடர்புபடாத கைதிகளுக்கு சலுகைகள் வழங்க தீர்மானம்

33 குற்றங்களுடன் தொடர்புபடாத கைதிகளுக்கு சலுகைகள் வழங்க தீர்மானம்

33 குற்றங்களுடன் தொடர்புபடாத கைதிகளுக்கு சலுகைகள் வழங்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

03 May, 2020 | 2:47 pm

Colombo (News 1st) தண்டனை சட்டக்கோவையில் உள்ளடக்கப்பட்டுள்ள 33 குற்றங்களுடன் தொடர்புபடாத கைதிகளுக்கு சலுகைகளை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

வெசாக் பூரணை தினத்தன்று சலுகை திட்டங்களை அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் M.J.W.தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, 33 குற்றங்களுக்குள் இல்லாத 65 வயதிற்கு மேற்பட்ட கைதிகளை விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர கடந்த ஏப்ரல் 07 ஆம் திகதி வரை அபராதப் பணம் செலுத்த முடியாத குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிகளையும் விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏனைய சில கைதிகளுக்கு 7 நாட்கள் மன்னிப்பின் அடிப்படையில் செல்ல அனுமதி வழங்கவுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் M.J.W தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்