by Bella Dalima 03-05-2020 | 7:20 PM
Colombo (News 1st) ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
10,633 பேருக்கு புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பமாகியதிலிருந்து பதிவாகிய மிகப் பாரிய நாளாந்த அதிகரிப்பு இதுவாகும்.
இதனையடுத்து, ரஷ்யாவில் தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,34,687 ஆக உயர்வடைந்துள்ளது.
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவிலேயே அதிகளவிலான தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் அரைவாசிப்பேருக்கு நோய் அறிகுறிகள் எவையும் இருக்கவில்லையெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக தற்காலிக வைத்தியசாலைகள் ரஷ்யாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்படுகின்ற போதிலும், இறப்பு வீதம் குறைவாகவே காணப்படுகின்றமை சிறந்த விடயம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1280 ஆகவுள்ளது.
இதனிடையே ஸ்பெய்னில் கொரோனா மரணங்களின் மிகக்குறைந்த நாளாந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.