ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல்

ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல்

by Staff Writer 03-05-2020 | 8:19 PM
Colombo (News 1st) கொழும்பு, கம்பஹா , களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது. குறித்த மாவட்டங்களில் நாளை (04) முதல் மே மாதம் 6 ஆம் திகதி புதன்கிழமை வரை தினமும் இரவு 8 மணி தொடக்கம் மறுநாள் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. மே மாதம் 6 ஆம் திகதி புதன்கிழமை இரவு 8 மணிக்கு பிறப்பிக்கப்படவுள்ள ஊரடங்கு சட்டம் மே மாதம் 11 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு , கம்பஹா , களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மே மாதம் 11 ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம், ஊரடங்கு சட்டம் இருக்கும் நிலையிலும் மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவரவும் நிறுவனங்களை திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.