அக்குரணை, பேருவளை பகுதிகள் மீண்டும் திறப்பு

by Staff Writer 03-05-2020 | 4:12 PM
Colombo (News 1st) கொரொனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தப்பட்ட கண்டி மாவட்டத்தின் அக்குரணை பகுதியும் களுத்துறை மாவட்டத்தின் பேருவளை பகுதியும் இன்று மீள திறக்கப்பட்டன. குறித்த பகுதிகளில் இறுதி நோயாளி அடையாளம் காணப்பட்ட நாள் முதல் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் குறித்த பகுதிகளை மீண்டும் திறந்து விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.