ஹட்டன் – அபோஸ்லி தோட்டத் தொழிலாளர் குடியிருப்பில் தீ பரவல்

ஹட்டன் – அபோஸ்லி தோட்டத் தொழிலாளர் குடியிருப்பில் தீ பரவல்

எழுத்தாளர் Staff Writer

03 May, 2020 | 7:29 pm

Colombo (News 1st) ஹட்டன் – அபோஸ்லி தோட்டத்தில் நேற்று (02) மாலை பரவிய தீயினால் 50-க்கும் மேற்பட்டவர்கள் இருப்பிடங்களை இழந்துள்ளனர்.

அபோஸ்லி தோட்டத்திலுள்ள தொழிலாளர் குடியிருப்புத் தொடர் ஒன்றில் நேற்று மாலை 6.30 அளவில் பரவிய தீயினால் 8 குடியிருப்புகள் முற்றாகவும் 6 குடியிருப்புகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

இந்த குடியிருப்புகளில் வசித்துவந்தவர்களின் உடைமைகளும் இதன்போது அழிவடைந்துள்ளன.

இந்த வீடுகளில் வசித்து வந்த 50-க்கும் மேற்பட்டவர்களை பாதுகாப்பான இடமொன்றில் தங்கவைப்பதற்கு தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்