மஹர சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற கைதி உயிரிழப்பு

மஹர சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற கைதி உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

03 May, 2020 | 2:27 pm

Colombo (News 1st) மஹர சிறையிலிருந்து கைதிகள் சிலர் தப்பிக்க முயன்ற போது, அவர்களில் ஒருவர் மதிலில் இருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

07 கைதிகள் நேற்றிரவு தப்பிச்செல்ல முயன்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் , பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டார்.

இதன்போது, சிறை அதிகாரிகளுக்கும் கைதிகளுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

நிலைமையை கட்டுப்படுத்த சிறை அதிகாரி ஒருவரால் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இந்த சந்தர்ப்பத்தில் கயிறு ஒன்றைப் பயன்படுத்தி சிறைச்சாலை மதில் மீதேறி தப்பிப்பதற்கு கைதி ஒருவர் முயன்றுள்ளார்.

கயிறு அறுந்தமையால் குறித்த கைதி கீழே வீழ்ந்ததாகவும் வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் அவர் உயிரிழந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

38 வயதான கைதி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

கைகலப்பின் போது காயமடைந்த சிறை அதிகாரிகள் இருவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்