பருப்பு டின்மீனுக்கு அதிகபட்ச சில்லரை விலை நீக்கம்

பருப்பு, டின் மீனுக்கான அதிகபட்ச சில்லரை விலை நீக்கம்

by Staff Writer 03-05-2020 | 3:00 PM
Colombo (News 1st) பருப்பு மற்றும் டின் மீனுக்கான அதிகபட்ச சில்லரை விலை நீக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானி நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வௌியிடப்பட்டுள்ளது. பருப்பு மற்றும் டின் மீனுக்கான கட்டுப்பாட்டு விலை கடந்த மாதம் 17 ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டது. ஒரு கிலோகிராம் பருப்பிற்கு அதிகபட்ச சில்லரை விலையாக 65 ரூபாவை அரசாங்கம் அறிவித்திருந்தது. டின் மீன் ஒன்றின் விலை 100 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.