நெதர்லாந்தில் இருந்து 235 கப்பல் பணியாளர்களை ஏற்றிய விசேட விமானம் இலங்கை வருகை

நெதர்லாந்தில் இருந்து 235 கப்பல் பணியாளர்களை ஏற்றிய விசேட விமானம் இலங்கை வருகை

எழுத்தாளர் Staff Writer

03 May, 2020 | 3:51 pm

Colombo (News 1st) நெதர்லாந்தில் இருந்து 235 கப்பல் பணியாளர்களை ஏற்றிய விசேட விமானம் இன்று முற்பகல் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் பணியாற்றுவதற்காக இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

நாட்டை வந்தடைந்த கப்பல் ஊழியர்கள் தொற்று நீக்கலுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர், விசேட பஸ் ஒன்றினூடாக அழைத்து செல்லப்பட்டதாக மத்தளை விமான நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

குறித்த விமானம் தற்போது மத்தளை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், கப்பலில் பணியாற்றும் 57 பேரை ஏற்றிய பின்னர் இன்றிரவு மீண்டும் நெதர்லாந்து நோக்கி பயணிக்கவுள்ளது.

காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலுக்கு சொந்தமான நிறுவனம், இலங்கை அரசாங்கத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, அவர்களுடைய பணியாளர்களை விமான நிலையத்தினூடாக பரிமாற்ற அனுமதி வழங்கப்பட்டதாக மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்