நாளை முதல் பணியிலிருந்து விலகியிருக்க தபால் தொழிற்சங்கங்கள் தீர்மானம்

நாளை முதல் பணியிலிருந்து விலகியிருக்க தபால் தொழிற்சங்கங்கள் தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

03 May, 2020 | 8:37 pm

Colombo (News 1st) சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் போதுமான அளவில் தபால் நிலையங்களில் பின்பற்றப்படவில்லை என தெரிவித்து நாளை (04) முதல் பணியிலிருந்து விலகியிருக்க தபால் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இது தொடர்பில் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார பின்வருமாறு தெரிவித்தார்

தபால் திணைக்களத்தில் 25,000 பேர் பணியாற்றுகின்றார்கள். நிலவுகின்ற சூழ்நிலை தொடர்பில் பொது நிர்வாக அமைச்சினால் சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. அரச பணியாளர்கள் தமது கடமைகளை மேற்கொள்ளும் போது அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தும் நிபந்தனைகள் தொடர்பில் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல் காணப்படுகின்றது. ஊழியர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் குறைந்தளவிலேயே காணப்படுகின்றன. பணியாற்றுபவர்கள் தொற்றுக்கு உள்ளாவதற்கு நாங்கள் எதிர்ப்பினைத் தெரிவிக்கின்றோம். இவர்கள் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். உரிய முறையில் பாதுகாப்பு நடைமுறைகள் உறுதிப்படுத்தப்படாமையினால் நாங்கள் சேவையிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளோம்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்