அனுமதிப்பத்திரமின்றி சிவனொளிபாத மலைக்கு லொறியில் பயணித்த நால்வர் கைது

அனுமதிப்பத்திரமின்றி சிவனொளிபாத மலைக்கு லொறியில் பயணித்த நால்வர் கைது

அனுமதிப்பத்திரமின்றி சிவனொளிபாத மலைக்கு லொறியில் பயணித்த நால்வர் கைது

எழுத்தாளர் Staff Writer

03 May, 2020 | 4:19 pm

Colombo (News 1st) அக்குரஸ்ஸ பிரதேச சபையின் தலைவர் முனிதாச கமகே உள்ளிட்ட நால்வர் மஸ்கெலியா – மவுசாகலை பொலிஸ் காவலரணில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு அனுமதிப்பத்திரமின்றி, அக்குரஸ்ஸயிலிருந்து சிவனொளிபாத மலைக்கு லொறியொன்றில் பயணித்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட லொறியில் பயணப்பொதிகள் சில காணப்பட்டதுடன், அது பிரதேச சபைக்கு சொந்தமான லொறி எனவும் பொலிஸார் கூறினர்.

சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்