துப்பாக்கிச்சூட்டில் யானைக்குட்டி உயிரிழப்பு

உடவளவ சரணாலயத்தில் துப்பாக்கிச்சூட்டில் யானைக்குட்டி உயிரிழப்பு

by Staff Writer 02-05-2020 | 4:56 PM
Colombo (News 1st) உடவளவ சரணாலயத்தில் பொக்குனா எனப்படும் யானைக்குட்டியொன்று துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளது. பிரதேச மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உடவளவ வனஜீவராசிகள் அலுவலகம் தெரிவித்தது. எம்பிலிப்பிட்டிய நீதவானுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், யானைக்குட்டியை பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஆறரை வயது நிரம்பிய யானைக்குட்டியொன்றே உயிரிழந்துள்ளது.