முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த இருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த இருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த இருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

02 May, 2020 | 3:12 pm

Colombo (News 1st) முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

திடீர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் நேற்று (01) மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக விமானப்படை பேச்சாளர், குரூப் கெப்டன் துஷான் செனவிரத்ன தெரிவித்தார்.

80 மற்றும் 81 வயதுடைய குணசிங்கபுர பகுதியைச் சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளனர்.

எனினும், அவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்