பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு விசேட விமான சேவை

பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு விசேட விமான சேவை

பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு விசேட விமான சேவை

எழுத்தாளர் Staff Writer

02 May, 2020 | 5:10 pm

Colombo (News 1st) பிரித்தானியாவின் லண்டன் மற்றும் அவுஸ்திரேலியாவின் மெல்பர்னில் இருந்து நாடு திரும்ப எதிர்பார்த்துள்ள இலங்கையர்களுக்காக விசேட விமான சேவைகளை முன்னெடுக்க ஶ்ரீலங்கன் விமான சேவை உத்தேசித்துள்ளது.

நாளை (03), நாளை மறுதினம் (04) மற்றும் எதிர்வரும் 05 ஆம் திகதிகளில் விசேட விமான சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

லண்டனில் இருந்து மூன்று விமான சேவைகளும் மெல்பர்னில் இருந்து ஒரு விமான சேவையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை லண்டனில் இருந்து கொழும்பு நோக்கி மூன்று விமானங்கள் பயணிக்கவுள்ளன.

மே 8 ஆம் திகதி மெல்பர்னில் இருந்து கொழும்பு நோக்கி ஒரு விமானம் பயணிக்கவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்