கொரோனா தொற்றாளர்கள் 10 பேர் குணமடைந்துள்ளனர்

கொரோனா தொற்றாளர்கள் 10 பேர் குணமடைந்துள்ளனர்

எழுத்தாளர் Staff Writer

02 May, 2020 | 3:54 pm

Colombo (News 1st) கொரோனா தொற்றாளர்கள் 10 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 172 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது.

511 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 179 பேர் மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்