ஊரடங்கு சட்டத்தினால் கொழும்பில் நிர்க்கதியான 300 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

ஊரடங்கு சட்டத்தினால் கொழும்பில் நிர்க்கதியான 300 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

ஊரடங்கு சட்டத்தினால் கொழும்பில் நிர்க்கதியான 300 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

எழுத்தாளர் Staff Writer

02 May, 2020 | 8:38 pm

Colombo (News 1st) ஊடரங்கு சட்டம் காரணமாக தமது மாவட்டங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாது கொழும்பில் நிர்க்கதியாகியிருந்த சிலர் இன்று தமது சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இன்று முற்பகல் பேலியகொடை விஜயகுமாரதுங்க மைதானத்தில் 300 பேர் பொலிஸாரினால் அவர்களது மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு, இவர்கள் பஸ்களில் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

கர்ப்பிணித் தாய்மார் , கைக்குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார் மற்றும் வயோதிபர்களும் இன்று அனுப்பி வைக்கப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்