இந்தியாவில் முடக்கம் மேலும் 2 வாரங்களுக்கு நீடிப்பு

இந்தியாவில் முடக்கம் மேலும் 2 வாரங்களுக்கு நீடிப்பு

இந்தியாவில் முடக்கம் மேலும் 2 வாரங்களுக்கு நீடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

02 May, 2020 | 3:42 pm

Colombo (News 1st) இந்தியாவில் மே 3 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்ட முடக்கம் மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், மே 3 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்ட முழு முடக்க நடவடிக்கையை தற்போது மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாடசாலைகள், கல்லூரிகள், கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், ஹோட்டல் மற்றும் சிறு உணவகங்கள் உட்பட விருந்தோம்பல் சேவைகள், திரையரங்குகள், விளையாட்டு வளாகங்கள் போன்ற பெரிய பொதுக்கூட்டங்களும் மூடப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

மேலும், சமூக, அரசியல், கலாசாரக் கூட்டங்கள், மத வழிபாட்டுத்தலங்களில் பிரவேசிப்பதற்கான அனுமதியையும் அரசு மறுத்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்