by Staff Writer 01-05-2020 | 2:49 PM
Colombo (News 1st) நாவலப்பிட்டி நகர சபையின் முன்னாள் மேயர் உள்ளிட்ட 8 பேர் கினிகத்ஹேனையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிடைத்த தகவலுக்கமைய சந்தேகநபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் வசமிருந்த பணம், இரண்டு வாகனங்கள் மற்றும் கள்ளு போத்தல்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நாவலப்பிட்டி, நோட்டன்பிரிஜ் மற்றும் ஹட்டன் பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.