ஜனாதிபதியின் மே தின வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதியின் மே தின வாழ்த்துச் செய்தி

by Staff Writer 01-05-2020 | 3:13 PM
Colombo (News 1st) எவ்வித அசௌகரியங்கள் ஏற்பட்டாலும் தொழிலாளர்களின் வாழ்வியலுக்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்கு எதிராக போராடுவோருடன் இணைந்து எதிர்காலத்தை வெற்றி கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி தனது தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோருக்கு கௌரவமளிப்பதற்கான சந்தர்ப்பமாக தொழிலாளர் தினத்தை ஏற்படுத்திக் கொள்வதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தன்று Covi - 19 தொற்றுக்கு எதிராகப் போராடுகின்ற சுகாதாரப் பிரிவினர், முப்படையினர், அரச அதிகாரிகள் உட்பட அனைத்துத் துறைகளிலும் பணியாற்றுவோரை இந்நாளில் கௌரவிக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான சவால்களைத் துணிச்சலுடன் ஏற்றுக்கொள்வதாகவும் பிரதமர் விடுத்துள்ள சர்வதேச தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் சௌபாக்கியமான, திடவுறுதி மிகுந்த எதிர்காலம் அமைய வேண்டும் எனப் பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.