ரணசிங்க பிரேமதாசவின் 27ஆவது நினைவுதினம் இன்று

ரணசிங்க பிரேமதாசவின் 27ஆவது நினைவுதினம் இன்று

ரணசிங்க பிரேமதாசவின் 27ஆவது நினைவுதினம் இன்று

எழுத்தாளர் Staff Writer

01 May, 2020 | 3:05 pm

Colombo (News 1st) காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 27 ஆவது நினைவுதினம் இன்று (01) புதுக்கடையிலுள்ள அன்னாரது உருவச்சிலைக்கு அருகில் நடைபெற்றது.

கொழும்பு நகர ​சபையினூடாக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த ரணசிங்க பிரேமதாச பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் பிரதமராகவும் இலங்கையின் இரண்டாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் நாட்டிற்கு ஆற்றிய சேவை அளப்பரியது.

‘செமட செவன’ திட்டத்தினூடாக பிரேமதமாச ஆரம்பித்த உதா கம்மான திட்டம் சர்வதேச அளவிலும் முக்கியத்துவம் பெற்றது.

ஜனசவிய, பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டம் என்பன ரணசிங்க பிரேமதாசவின் எண்ணக்கருவில் உருவாகிய திட்டங்களாகும்.

1993 ஆம் ஆண்டு மே தின ஊர்வலத்தில் கலந்துகொண்டிருந்தபோது கொழும்பு – ஆமர் வீதியில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் அன்னார் உயிரிழந்தார்.

இந் நாட்டு மக்களின் எண்ணங்களில் நிலைத்திருக்கும் சிறந்த தலைவராக பிரேமதாச திகழ்கின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்