கொரோனாவின் உச்சக்கட்டத்தை பிரித்தானியா கடந்துவிட்டது – பிரதமர்

கொரோனாவின் உச்சக்கட்டத்தை பிரித்தானியா கடந்துவிட்டது – பிரதமர்

கொரோனாவின் உச்சக்கட்டத்தை பிரித்தானியா கடந்துவிட்டது – பிரதமர்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

01 May, 2020 | 4:54 pm

Colombo (News 1st) பொருளாதார நடவடிக்கைகள், பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பான விரிவான திட்டங்களை வௌியிடவுள்ளதாக பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நடவடிக்கைகள், பாடசாலைகளை மீளத் திறப்பதற்கும் மக்கள் தமது பணியிடங்களுக்குச் செல்வதற்கான உதவிகளை வழங்குவதற்குமான திட்டங்கள் அடுத்த வாரத்தில் வௌியிடப்படுமென அவர் அறிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றின் உச்சக்கட்டத்தை பிரித்தானியா கடந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் கட்ட அச்சுறுத்தல் காணப்படுவதாக அவர் எச்சரித்துள்ளார்.

இந்தநிலையில் முகக்கவசம் அணிவது முடக்கலின் பின்னரான நிலையில் பயனுள்ளதாக இருக்குமென பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்