உள்ளூர் பால்மா விலை அதிகரிப்பு

உள்ளூர் பால்மா விலை அதிகரிப்பு

உள்ளூர் பால்மா விலை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

01 May, 2020 | 8:33 pm

Colombo (News 1st) உள்ளூர் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் பால்மா பக்கெற் ஒன்றின் விலை 85 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஒரு கிலோகிராம் உள்ளூர் பால்மாவின் புதிய விலை 945 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

400 கிராம் உள்ளூர் பால்மாவின் விலை 380 ரூபாவாகும்.

உள்ளூர் பண்ணையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்