மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 660 ஆகியது

by Staff Writer 30-04-2020 | 9:15 PM
Colombo (News 1st) Update: 30/04/2020 ; 9.05 PM: கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 660 ஆக அதிகரித்துள்ளதாக  அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ---------------------------------------------------------------------------------------------------------------------------------- Update: 30/04/2020 ; 6.30 PM: கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 653 ஆக அதிகரித்துள்ளதாக  சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. -------------------------------------------------------------------------------------------------------------------------------- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மேலும் 30 பேருக்கு நேற்று Covid -19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதில் இராணுவத்தின் 22 உறுப்பினர்கள் அடங்குவதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்டத்திலேயே அதிக கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் அடையாளங் காணப்பட்டுள்ள நோயாளர்களுடன் தொடர்புகளை பேணிய1680 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 338 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்துள்ளதாக கொழும்பு பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் 250 நோயாளிகள் மருத்துவ கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 6000 இற்கும் அதிகமானவர்களின் உமிழ்நீர் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நாளாந்தம் 350 முதல் 450 வரையான பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் விசேட வைத்திய நிபுணர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் மேலும் 03 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளனர். இதற்கமைய குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 139 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.