கொரோனாவின் மத்தியில் சீனாவை விமர்சித்த ட்ரம்ப்

கொரோனாவின் மத்தியில் சீனாவை விமர்சித்த டொனால்ட் ட்ரம்ப்

by Chandrasekaram Chandravadani 30-04-2020 | 4:48 PM
Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலில் தம்மை தோற்கடிப்பதற்கு சீனா இயலுமான எந்த நடவடிக்கையையும் எடுக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். கொரோனா தொற்று பரவலை கையாண்ட விதம் அதற்கான சாட்சி என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவலை கையாண்ட விதம் குறித்து சீனா மீது ஏற்கனவே டிரம்ப் குற்றஞ்சுமத்தியிருந்தார். சீனா மீது வர்த்தக போரை தொடுத்ததால், தன்னை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற வேண்டும் என சீனா விரும்புவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். Covid - 19 தொற்றினால் அமெரிக்காவின் பொருளார வளர்ச்சி முதற் காலாண்டில் 4.8 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 61,669 ஆக உயர்வடைந்துள்ளது. இதுவரை அங்கு 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று புதிதாக 378 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 13 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.