அட்டாளைச்சேனையில் பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நால்வர் கைது

அட்டாளைச்சேனையில் பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நால்வர் கைது

அட்டாளைச்சேனையில் பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நால்வர் கைது

எழுத்தாளர் Staff Writer

30 Apr, 2020 | 3:11 pm

Colombo (News 1st) அம்பாறை – அட்டாளைச்சேனை, சம்புநகர் பகுதியில் பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (30) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணை பலாத்காரமாக அழைத்துச்சென்ற நால்வர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸாருக்கு தெரியவந்ததையடுத்து, பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதையடுத்து, சந்தேகநபர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட 42 வயதுடைய பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்