வௌ்ளை சீனிக்கான நிர்ணய விலை நீக்கம்

வௌ்ளை சீனிக்கான நிர்ணய விலை நீக்கம்

by Staff Writer 29-04-2020 | 4:17 PM
Colombo (News 1st) ஒரு கிலோகிராம் வௌ்ளை சீனிக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகபட்ச கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, ஒரு கிலோகிராம் நிறையுடைய வௌ்ளை சீனியின் மொத்த விற்பனை விலை 100 ரூபாவாகவும் சில்லறை விலை 105 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வௌ்ளை சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து இதற்கு முன்னர் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.