அழியும் அபாயத்தில் புராதன ஓவியங்கள்

புராதன ஓவியங்கள் அழியும் அபாயமுள்ளதாக தொல்பொருளியல் திணைக்களம் தெரிவிப்பு

by Staff Writer 29-04-2020 | 3:12 PM
Colombo (News 1st) நாட்டின் தற்போதைய சூழலில் மத வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டிருப்பதால் தொல்பொருள் மதிப்பு மிக்க புராதன ஓவியங்கள் அழியும் அபாயமுள்ளதாக தொல்பொருளியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் புராதன ஓவியங்களுடன் கூடிய அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் நாளொன்றில் 4 மணித்தியாலங்களுக்கு திறந்து வைக்குமாறு கோரிக்கை விடுப்பதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பேராசிரியர் செனரத் திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் புராதன ஓவியங்களுடன் கூடிய மூவாயிரத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ளதாகவும் அவை தொடர்ந்தும் மூடப்பட்டிருப்பதால் பெறுமதி மிக்க ஓவியங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் சிக்கல்கள் காணப்பட்டால் தொல்பொருள் திணைக்களத்துக்கு அறிவிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.