கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 622 ஆக அதிகரிப்பு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரிப்பு

by Staff Writer 29-04-2020 | 8:04 PM
Colombo (News 1st) Update: 29/04/2020 ; 7.30 PM: கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 627 ஆக அதிகரித்துள்ளதாக  சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. -------------------------------------------------------------------------------------------------------------------------------- 29/04/2020 ; 1.30 PM: நாட்டில் மேலும் மூவருக்கு Covid - 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 622 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு  அமைச்சு தெரிவித்துள்ளது. கடற்படையின் 226 உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்களில் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த 147 பேரும் விடுமுறையில் உள்ள 79 பேரும் அடங்குகின்றனர். இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகிய 137 பேர் குணமடைந்துள்ளனர். இதனிடையே, 478 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் 317 நோயாளிகள் மருத்துவ கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிக கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 31 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டனர். நேற்று அடையாளங் காணப்பட்டவர்களில் 21 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தொற்றுக்குள்ளாகிய 8 பேர் நேற்று குணமடைந்தமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே, நேற்று முன்தினம் கொழும்பில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் நால்வருடன் தொடர்புகளை பேணிய 162 பேர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லையென கொழும்பு பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார். இதேவேளை, ஹோமாகம ஆதார வைத்தியசாலை இன்று (29) முதல் ஊழஎனை -19 நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.